Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

குவைத் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: ஈரான் கடும் எச்சரிக்கை !

குவைத்தில் உள்ள மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது இன்று அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில், சுத்திகரிப்பு நிலையத்தின் பல பிரிவுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதலுக்குப் பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில அலகுகள் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும், அவசர சேவை குழுக்கள் தீயை கட்டுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது உள்கட்டமைப்புகள் மீண்டும் தாக்கப்பட்டால் கடுமையான மற்றும் கட்டுப்பாடற்ற பதிலடி வழங்கப்படும் என அந்த நாடு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இந்த நிலைமை உலகளாவிய எரிசக்தி விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...