பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணு மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்புகள் கடுமையாக சிதைக்கப்பட்டுள்ளதாகவும், போரில் இஸ்ரேல் முன்னிலை வகிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரான் இனி யுரேனியம் செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கவோ முடியாது என கூறினார். மேலும், டொனால்டு ட்ரம்ப் உடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருவதாகவும், அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டாண்மை இந்தப் போரில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
ட்ரம்பின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய எரிவாயு வளாகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், போர் எதிர்பார்த்ததை விட விரைவில் முடிவுக்கு வரும் என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.






3 Comments