ஈரான் செம்பிறை சங்கம் அறிவித்ததாவது, ஈரான் மீது நடைபெற்ற வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 204 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 53 பேர் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், மேலும் இரண்டு கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர்.
போர் தொடங்கிய முதல் நாள் முதல் இதுவரை 18,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதலால் 498 பாடசாலைகள், 251 மருத்துவ மையங்கள் மற்றும் 17 செம்பிறை சங்க மையங்கள் சேதமடைந்துள்ளன. அதே நேரத்தில், 70,000க்கும் மேற்பட்ட குடியிருப்பு அலகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
“குழந்தைகளும் கர்ப்பிணித் தாய்மார்களும் இலக்கு வைக்கப்படுவது இனி இராணுவச் சம்பவமாக இருக்காது; இது மனித கண்ணியத்தை மீறும் மிக மோசமான செயல்” என்று செம்பிறை சங்கம் கண்டனம்வைச் செய்துள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த அப்பட்ட மீறல்களுக்கு மௌனம் காக்கக் கூடாது என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.






3 Comments