வளைகுடா பிராந்தியத்தில் பதற்ற நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஈரானின் எரிபொருள் மற்றும் எரிசக்தி வளங்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதிலடி நடவடிக்கையாக வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி உட்கட்டமைப்புகள் இலக்காக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவுக்கு தமது வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்கும் அல்லது இராணுவத் தளங்களை வழங்கும் நாடுகளும் ஈரானின் பதில் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக தூதரக ரீதியாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த பதற்ற நிலை உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
48 மணிநேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






3 Comments