ஈரான், தனது 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்குகளை மட்டும் தாக்க முடியும் என உலகிற்கு அறிவித்திருந்த போதிலும், இன்று 4,000 கி.மீ. தொலைவில் உள்ள டியாகோ கார்சியா தீவை குறி வைத்து ஏவுகணைகளை வீசியுள்ளது.
இந்த தீவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவ முகாம் அமைந்துள்ளது. அமெரிக்கா தனது குண்டுவீச்சு விமானங்கள் மூலம் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுத்து உள்ளது.
ஈரான், இந்த தீவை நோக்கி இரு நடுத்தர ரக ஏவுகணைகள் விடுத்தது. இதில் ஒரு ஏவுகணை தோல்வியடைந்தது; மற்றொன்று அமெரிக்கா எம்.எம்-3 ஏவுகணை மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டது.
இந்த தாக்குதல் மூலம், ஈரான் தனது போர்வளை இந்திய பெருங்கடல் பகுதியின் வரையிலும் விரிவடைந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஈரானின் இந்த தொலைதூர தாக்குதல், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளை அதிர்ச்சியில் வைத்துள்ளது. மேலும், வான் பாதுகாப்பு கருவிகளை பல இடங்களில் அமைக்கவேண்டிய அவசர நிலைஏற்பட்டுள்ளது.






3 Comments