புது டெல்லி மற்றும் மும்பை போன்ற இந்திய நகரங்களைத் தாக்குவது பாகிஸ்தானின் “இயல்புநிலை நடவடிக்கையாக” இருக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டின் அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
துளசி கப்பார்ட் பாகிஸ்தானை எதிர்மறையாக பார்க்கிறார் என்றும், இந்தியாவின் அக்னி-5 மற்றும் அக்னி-6 போன்ற ஏவுகணைகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்றும் பாசித் குற்றம்சாட்டினார். பாகிஸ்தானின் ஏவுகணை திறனை அதிகரிக்க வேண்டும் என்றும், அது விரிவடைய வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்கா–இந்தியா உறவு மூலோபாய ரீதியில் வலுப்பெற்று வருவதாகவும், பாகிஸ்தானுடன் அமெரிக்காவின் உறவு நீண்டகால கூட்டாண்மையாக இருக்காது என்றும் பாசித் குறிப்பிட்டார். அதேசமயம், பாகிஸ்தானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டம் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என துளசி கப்பார்ட் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






3 Comments