இஸ்ரேலின் முக்கிய நகரம் தெல் அவிவில் இன்று காலை ஏற்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல்கள், ஈரானின் கிளஸ்டர் வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறுகின்றன.
இந்த வகை ஆயுதங்களில் ஒரே ஏவுகணையிலிருந்து பல சிறிய குண்டுகள் பிரிந்து பரந்த பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தும் தன்மை உள்ளது. தடுப்பு ஏவுகணைகள் முக்கிய வெடிபொருள் பிரிவதற்கு முன்பே தடுக்காவிட்டால், முழுமையாக தடுப்பது மிகவும் கடினம் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளதாகவும், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடையக்கூடும் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது.






3 Comments