Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

டிஜிட்டல் தளங்களிலும் சாதனை படைத்த நரேந்திர மோடி!

இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.

சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங்கின் 8,930 நாட்கள் பதவிக்கால சாதனையை முறியடித்துள்ள்ளார் பிரதமர் மோடி.

குஜராத் முதலமைச்சர் மற்றும் இந்தியப் பிரதமர் ஆகிய பதவிகளில் இணைந்து மொத்தம் 8,931 நாட்களைப் பூர்த்தி செய்து தனது 25 ஆவது ஆண்டு அரசியல் தலைமைத்துவப் பயணத்தையும் ஆரம்பித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைக் கொண்ட இவர் 2014, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றுள்ள நிலையில்.

முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் அரசியல் களத்தைத் தாண்டி டிஜிட்டல் தளங்களிலும் உலகத் தலைவர்களுக்கிடையில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் 101 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் உலகத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் 106.4 மில்லியன் பின்தொடர்பவர்களையும் யூடியூப் தளத்தில் 30 மில்லியன் சந்தாதாரர்களையும் கொண்டு உலகளவில் அதிக செல்வாக்கு மிக்க தலைவராகத் காணப்பகின்றார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...