உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், பிராந்தியப் போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் தீவிர இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் அவசரத் தொலைபேசி உரையாடல் மேற்கொண்டார். இதில், மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்த நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வைக் கண்டுபிடிக்கும் நோக்கில் துருக்கி, கட்டார் மற்றும் தென்கொரியா நாடுகளின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
போர்ச் சூழல் காரணமாக எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவிலியன் உட்கட்டமைப்புகள் மீது ஏற்படும் தாக்குதல் அச்சுறுத்தல்கள், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய குறிக்கோளாகும்.






3 Comments