மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து ஏவப்பட்ட 7 ஆளில்லா வானூர்திகள் அந்நாட்டு வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அவற்றை தடுக்க இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹிஸ்புல்லா அமைப்பு தெற்கு லெபனான் பகுதியில் உள்ள இஸ்ரேலியப் படைகளின் மீது பலமுறை ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதாக தெரிவித்துள்ளது. யாரூன், அத்-துஹைரா மற்றும் மரூன் அல்-ராஸ் பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளன.






3 Comments