இஸ்ரேல் ஆதரவு குழுக்கள் பல வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன வெளியான காணொளிகளில், ரமல்லா – நாப்லஸ் சாலையில் ஒரு பாலஸ்தீன ஓட்டுநர் குழுவாகச் சூழப்பட்டு தாக்கப்படுவது பதிவாகியுள்ளது.
மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லாமல் தடுக்க சாலையில் பெரிய கற்கள் வைத்து மறிக்கப்பட்டதுடன், நாப்லஸ் பகுதியில் ஒரு லாரிக்கும் தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன சில வீடுகளும் தீவைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களில் பல பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்நிலையில், அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், சர்வதேச கவனம் இச்சம்பவங்களின் மீது திரும்பியுள்ளது.






3 Comments