மேற்கு ஆசியாவில் அடுத்த 48 மணி நேரம் மிகவும் தீர்மானகரமானதாக மாறியுள்ளது ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காவிட்டால் ஈரானின் ஆற்றல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய சொத்துகள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பல சரக்கு கப்பல்கள் அந்தப் பகுதியை தவிர்த்து செல்லத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், உலக நாடுகள் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு தரப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளன அதேவேளை பிராந்தியத்தில் இராணுவப் படையணிகள் அதிகரித்து வருகின்றன.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான தொடர்ச்சியான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால், கடல்சார் வர்த்தகம் பாதிக்கப்படுவதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் பெரும் அச்சம் நிலவுகிறது இந்த நிலைமை உலக பொருளாதாரத்திற்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Â






3 Comments