டெல்லி அரசு 2026-27 பட்ஜெட்டில் பழைய நீர் குழாய்கள் புதுப்பிப்பு, குடிநீர் விநியோகம் விரிவாக்கம் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த, டெல்லி ஜல் வாரியத்திற்கு ரூ.9,000 கோடியை ஒதுக்கியுள்ளது.
முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ரேகா குப்தா கூறியதாவது: 12.7 கிமீ டிரான்ஸ்மிஷன் லைன்கள், 172 கிமீ விநியோக குழாய்கள் அமைக்கப்பட்டு, தினசரி 10 மில்லியன் கேலன் நீர் விநியோகம் அதிகரிக்கும். சந்திரவால் நீர் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.475 கோடி ஒதுக்கப்பட்டு சுமார் 9 லட்சம் குடும்பங்களுக்கு பயன்.
வடக்கு டெல்லியில் வஜிராபாத் நீர் நிலையத்துடன் இணைந்த திட்டம் 10 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது; ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவி பெற வாய்ப்பு உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் 707 எம்.ஜி.டி. யிலிருந்து 814 எம்.ஜி.டி. யாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது இந்த முதலீடுகள் நகரின் குடிநீர் அணுகல் மற்றும் சுகாதார தரத்தை மேம்படுத்த முக்கியமான நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.






3 Comments