காசாவில் கடந்த மாதம் அவசர உதவியாளர்கள் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது.
தொழில்நுட்ப தவறுகள் காரணமாகவே இந்த தவறு நடந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) விசாரணையில் கூறியுள்ளது.
இந்த தாக்குதலில், பாலஸ்தீனிய சிவப்பு அரைச்சிலுவை அமைப்பின் அம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் ஐ.நா. ஊழியர் ஒருவர் என 15 பேர் கொல்லப்பட்டனர்.
விசாரணைகளில், ஆபத்தான பகுதியில் அச்சுறுத்தலாக தென்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தியதாக IDF தெரிவித்திருந்தது.
விசாரணையின் பின்னர், சம்பந்தப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் துணை தளபதி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments