ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக யெடியோத் அஹ்ரோனூ ஊடகத்தை மேற்கோள் காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்கா மீடியேட்டர் ஸ்டீவ் விட்காஃப் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு ஈரானின் உச்ச தலைமை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர், கடந்த 24 நாட்களாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லையென தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய முக்கிய கப்பல் போக்குவரத்து பாதை ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும், இதை அமெரிக்காவும் ஈரானும் இணைந்து நிர்வகிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
நேற்று புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக தொடரின், ஜலசந்தி விரைவில் திறக்கப்படும். நானும் அயதுல்லாவும் இணைந்து கட்டுப்படுத்துவோம் என தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, ஒரு நாளைக்கு 15 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் 5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் பொருட்கள் செல்கிறது, இது உலகளாவிய கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தின் சுமார் 25% ஆகும்.






3 Comments