அமெரிக்கா–ஈரான் மோதல், அணுஆயுதங்களை வைத்திருப்பது சரியான முடிவு என்பதை நிரூபிக்கிறது என வடகொரியா தலைவர் Kim Jong Un தெரிவித்துள்ளார்.
உச்ச மக்கள் பேரவையில் உரையாற்றிய அவர், அமெரிக்காவை “அரசு ஆதரவிலான பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்” என குற்றம் சாட்டினார். மேலும், தனது நாட்டின் அணுஆயுத அந்தஸ்து “மீளமுடியாதது” என்றும் வலியுறுத்தினார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஈரானுடன் மோதல் நிலை தொடரும் நிலையில், வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சமிக்ஞை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணுஆயுத திறன் கொண்ட ஆயுத சோதனைகளை முன்னெடுத்து வருவது சர்வதேச கவலைகளை அதிகரித்துள்ளது.






3 Comments