ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், அமெரிக்காவும் இஸ்ரேலும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இதுவென தெரிவித்துள்ளார்.
அவர், அண்டை நாடுகள் மீது தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் லெபனானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அங்குள்ள மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதை நேரடியாகக் கண்டதாகவும், இது அவரது கவலையை எழுப்பும் விஷயமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவர் வலியுறுத்தியது: ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது நடத்தும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேபோன்று, இஸ்ரேலும் தனது இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
காசாவில் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் உயிரிழப்புகள் லெபனானில் மீண்டும் நிகழ அனுமதிக்கக் கூடாது என அவர் எச்சரித்துள்ளார்.






3 Comments