அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டின் எரிசக்தி உலைகள் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் காலக்கெடுவை மேலும் 10 நாட்களுக்கு நீடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, தாக்குதல்கள் நிறுத்தப்படும் காலம் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 8 மணி (அமெரிக்க கிழக்கு நேரம்) வரை நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அவை சுமுகமான முறையில் முன்னேற்றமடைந்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தைகள் குறித்து ஊடகங்களில் வெளியாகும் எதிர்மறையான செய்திகளை அவர் விமர்சித்துள்ளார். உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையை தணிக்கும் நோக்கில், தூதரக ரீதியிலான தீர்வுகளை முன்னிறுத்த இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், ஈரான் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் வெளியாகவில்லை.






3 Comments