ஹோர்முஸ் நீரிணையில் “எதிரி” நாடுகளின் கப்பல்களைத் தடுப்பது தமக்கு சட்டபூர்வமான உரிமை என ஈரான் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு கடற்கரை நாடாக (Coastal State), தமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கப்பல்களைத் தடுக்கும் அதிகாரம் ஈரானுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொள்ளும் “சட்டவிரோத ஆக்கிரமிப்பு” நடவடிக்கைகளே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே இந்தத் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படவில்லை என்றும், சில நட்பு நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கப்பல்கள், ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த நீரிணையில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன.
இதனுடன், ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடக்க விரும்பும் கப்பல்களிடமிருந்து சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வரை “போக்குவரத்துக் கட்டணம்” வசூலிக்கும் சட்டமூலம் ஒன்றை ஈரான் நாடாளுமன்றம் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






3 Comments