வடகொரியாவிற்கு முதல் முறையாக விஜயம் செய்த பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko, தலைவர் Kim Jong Unக்கு நவீன தானியங்கி துப்பாக்கி ஒன்றை பரிசளித்தார். பியொங்யாங்கில் நடைபெற்ற சந்திப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதற்கு பதிலாக, கிம் ஜாங் உன் வாள் மற்றும் லுகாஷென்கோ உருவம் பொறிக்கப்பட்ட பரிசுகளை வழங்கினார். மேலும், இரு நாடுகளும் “நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு” குறித்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.






3 Comments