ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார்.
பாரம்பரிய ரீதியில், அவரின் மறைவிற்கு பின்னர், பிரான்சிஸின் பதவிக்கு இன்னொருவரை தேர்ந்தெடுக்க கர்தினால்கள் உரோமுக்கு வரவழைக்கப்படுவார்கள்.
சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் அவரின் உடல் நிலை மிக மோசமாக இருந்த நிலையில், அவரின் இறுதி சடங்கிற்கான நடவடிக்கைகள் முன்னதாகவே மேற்கொள்ளப்பட்டன.
அதன தொடர்ந்து அடுத்த போப்பிற்கான தெரிவு குறித்தும் பாரம்பரிய ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்துள்ள நிலையில், ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் அடுத்த போப் தெரிவிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதன்படி, அடுத்த போப்பினை தேர்ந்தெடுக்க கர்தினால்கள் இப்போது உரோமுக்கு வரவழைக்கப்படுவார்கள். பாரம்பரியத்தின் படி, போப்பின் மரணம் வத்திக்கான் அதிகாரிகளால் சடங்கு ரீதியாக உறுதிப்படுத்தப்படும், மேலும் ஒன்பது நாட்கள் துக்கம் அறிவிக்கப்படும்.
மேலும், இறுதி கிரியை செய்வது பொதுவாக நான்காவது மற்றும் ஆறாவது நாளுக்கு இடையில் நடக்கும். பொதுவாக பாப்பரசர்கள் வழக்கமாக வத்திக்கான் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார்கள், ஆனால் வத்திக்கானின் சுவர்களுக்கு வெளியே உள்ள சாண்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் அடக்கம் செய்ய விரும்புவதாக பிரான்சிஸ் கூறியிருந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் போப் பிரான்சிஸைத் தேர்ந்தெடுக்க சுமார் 24 மணிநேரமும் ஐந்து வாக்குச்சீட்டுகளும் எடுத்துள்ளன. எனவே இந்த செயன்முறை அதிக நேரம் எடுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனை தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டவுடன், அவை சிஸ்டைன் சேப்பலுக்குள் ஒரு அடுப்பில் இட்டு எரிக்கப்படுகின்றன, இது புகைபோக்கி வழியாக வெளி உலகிற்கு ஒரு புகை சமிக்ஞையை அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஒரு போப் தெரிவு செய்யப்பட்டுள்ளாரா இல்லையா என்பது வெளியுலகிற்கு காட்டப்படும் என அந்நாட்டு பாரம்பரிய முறை குறிப்பிடுகின்றது.






3 Comments