Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பளித்த டி.டி.வி தினகரன்!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர். தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தி.மு.க தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ளது. அ.தி.மு.க 150 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 17 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க-வும் வேட்பாளர்கள் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் உள்ள அ.ம.மு.க சனிக்கிழமை வேட்பாளர் லிஸ்டை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சென்னை அடையாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் 11 தொகுதிகளில் அ.ம.மு.க போட்டியிட உள்ளது.

அதாவது, சைதாப்பேட்டை, திருப்பத்தூர், ஒட்டபிடாரம், திருவையார், பெரியகுளம், காரைக்குடி , திருச்சி மேற்கு, மன்னார்குடி, பூந்தமல்லி, மடத்துக்குளம், நாங்குநேரி ஆகிய 11 தொகுதிகளில் அ.ம.மு.க போட்டியிடுகின்றது. இந்த தொகுதிகளில், யார் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

வேட்பாளர் பட்டியல்

திருச்சி மேற்கு - தொடியம் ராஜசேகரன்

சைதாப்பேட்டை - செந்தமிழன்

பூந்தமல்லி - ஏழுமலை

மடத்துக்குளம் - சி.வி சண்முகவேல்

நாங்குநேரி - இசக்கிமுத்து

பெரியகுளம் - கதிர்காமு

மன்னார்குடி - எஸ் காமராஜ்

திருவையாறு - வேலு கார்த்திகேயன்

காரைக்குடி - தேர்போகி பாண்டி

திருப்பத்தூர் - ஞானசேகரன்

ஓட்டப்பிடாரம் - சுந்தர்ராஜன்

இதில் முன்னாள் அமைச்சர்கள் சி சண்முகவேல், செந்தமிழன் ஆகிய இரண்டு பேருக்கு டிடிவி தினகரன் வய்ப்பு அளித்துள்ளார்.

Â

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...