ஈரான் நாடாளுமன்றக் குழு, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக பெருமளவு எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால், இந்த தீர்மானம் அமல்படுத்தப்பட்டால் உலகளாவிய வர்த்தகம் மற்றும் எண்ணெய் விலைகளில் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் இன்னும் இறுதி அனுமதிக்காக காத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.






3 Comments