இஸ்ரேல் கொண்டு வந்துள்ள பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை வழங்கும் புதிய சட்டத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
இந்த சட்டம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இவ்விடயத்தில், பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்படுபவர்களுக்கான சட்டங்கள் மற்றும் தண்டனைகளைத் தீர்மானிக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்பதை அமெரிக்கா மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் முறையான மற்றும் நியாயமான நீதிமன்ற விசாரணைகள் மூலம், சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு இஸ்ரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டம் பாலஸ்தீனியர்களை மட்டுமே இலக்கு வைப்பதாக ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இருப்பினும், அமெரிக்கா இதனை இஸ்ரேலின் உள்நாட்டு சட்ட உரிமையாகக் கருதுவதாக தெரிவித்துள்ளது.






3 Comments