அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் வெளியிட்டுள்ள கருத்து, சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரது கூற்றுப்படி ஈரான் அரசு ரகசியமாக டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு நடைபெற்று வரும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வர உடனடி ஒப்பந்தம் ஒன்றை நாடி வருகிறது.
லெவிட் தெரிவித்ததாவது, ஈரான் அரசு வெளிப்படையாக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டாலும், உட்புறமாக பயந்து ஒப்பந்தத்திற்காக அணுகி வருவதாக கூறினார். மேலும், அவர்கள் வெளியே கூறும் கருத்துக்கள் உண்மையை பிரதிபலிப்பதில்லை என்றும், அது “பொய்கள் மட்டுமே” என்றும் குற்றம் சாட்டினார்.
அத்துடன் ஈரான் ஆட்சியின் சில பிரிவுகள், போர் மற்றும் அழிவு மேலும் அதிகரிக்காதபடி விரைவாக பேச்சுவார்த்தைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொது மேடையில் அவர்கள் கூறுவது ஒன்றாக இருக்கும் ஆனால் ரகசியமாக எங்களுக்கு தெரிவிப்பது முற்றிலும் வேறுபட்டது எனவும் லெவிட் தெரிவித்துள்ளார்.






3 Comments