அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தின் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன்றிரவு நாட்டிற்கு விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானுடன் தொடர்புடைய தற்போதைய நிலைமை குறித்து முக்கியமான புதிய தகவல்களை ஜனாதிபதி மக்களுக்கு அறிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.
இந்த உரை அமெரிக்க நேரப்படி இரவு 9.00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், அது இலங்கை மற்றும் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி முன்பே குறிப்பிட்டிருந்த நிலையில், போர் நிறுத்தம் அல்லது அமெரிக்க படைகள் ஈரானிலிருந்து வெளியேறும் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இந்த உரையில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments