அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகளின் தீவிரத் தாக்குதல்களுக்கு பிறகு, ஈரான் மீண்டும் தன்னைக் கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் வரை எடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் முற்றாகச் சிதைந்துள்ளதையும், அவர்களிடம் தற்போது கடற்படை, வான்படை, தரைப்படை என எதுவும் இல்லாத நிலைமையிலும், தொலைத்தொடர்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ட்ரம்ப் மேலும், ஈரானில் வழிநடத்தத் தலைவர்கள் இல்லை என்றும், "அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் நல்லது, வராவிட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையும் மாற்றியமைத்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.






3 Comments