Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

சூயஸ் கால்வாய் முடக்கம்: உலகப் பொருளாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தல் !

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் உலகப் பொருளாதாரம் ஏற்கனவே பெரும் பாதிப்பை எதிர்கொள்வதில், மற்றொரு முக்கிய கடல் வழித்தடமான சூயஸ் கால்வாயைப் பற்றியும் அமெரிக்கா கவலை வெளிப்படுத்தியுள்ளது.

ஈரானின் ஆதரவு அமைப்பான யேமனின் ஹுதி அமைப்பினர் சூயஸ் கால்வாயை முடக்கினால், உலகப் பொருளாதாரம் மீளமுடியாத சரிவை சந்திக்கும் என அமெரிக்க செனட்டர் கிறிஸ் மர்பி எச்சரித்துள்ளார்.

உலக வர்த்தகத்தில் சுமார் 15% வழிகள் சூயஸ் கால்வாயில் நடைபெறுகிறது. இது ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான மிக வேகமான கடல் வழியாகும். ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக எண்ணெய் விநியோகத்தில் ஏற்கனவே 20% பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சூயஸ் கால்வாயும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால், எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கிறது மற்றும் சுமார் 30% கொள்கலன் போக்குவரத்தைக் கையாள்கிறது. ஹோர்முஸ் நீரிணை பாரசீக வளைகுடாவை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் உலகின் முக்கியமான எரிசக்தி வழித்தடமாகும்.

இந்த இரு முக்கிய வழித்தடங்களும் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டால், சர்வதேச அளவில் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...