ஈரான் மீதான சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்கப் படைகள் தமது வான்பரப்பைப் பயன்படுத்தவோ அல்லது ஆதரவு வழங்கவோ பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் மறுத்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேட்டோ கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களான ஐரோப்பிய நாடுகள் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் தகுந்த ஆதரவை அளிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், நீண்டகால கூட்டாளிகள் இருந்தும் இத்தகைய சூழலில் உதவாத காரணத்தால், அந்த நாடுகளை “கோழைகள்” எனவும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஸ்பெயின் அரசு சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தாம் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த தீர்மானங்களால், வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் இடையே இராஜதந்திர பதற்றம் அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.






3 Comments