ஆல் இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுத்தீன் ஓவைசி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
குவஹாத்தியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அசாமில் நிலைமை மோசமாக இருப்பதாகவும், அதனை எதிர்கொள்ள ஆல் இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி-யை வலுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
“ஜனநாயகத்தில் கோஷங்கள் மட்டும் போதாது. வாக்கின் மூலம் ஹிமந்த பிஸ்வா சர்மாவிற்கு தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் ஒற்றுமையாக இருந்து இதை தடுக்க வேண்டும். தேர்தல் நாளில் உங்கள் வாக்கை பயன்படுத்துங்கள். ஜனநாயகத்தில் வாக்கு ஒரு சக்திவாய்ந்த ஆயுதம்,” என்றும் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை பெறும் என்ற கருத்தை அவர் நிராகரித்தார். அதிகமான வேட்பாளர்கள் சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
அவர், தேர்தல் பிரச்சாரத்திற்காக அசாமிற்கு வந்தபோது கட்சித் தொண்டர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், “இது பத்ருதீன் அஜ்மல் அல்லது என்னைப் பற்றியது அல்ல. உங்கள் குரலை யார் உயர்த்துவார்கள் என்பதே முக்கியம். உங்கள் உரிமைகளை பாதுகாக்க வாக்களிக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார் இந்த தேர்தல் சூழலில், அசாமில் அரசியல் போட்டி மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments