மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, முக்கிய கடல் வழித்தடங்களில் பாதுகாப்பை உறுதி செய்து, கடல் போக்குவரத்தை மீண்டும் வழக்குநிலைக்கு கொண்டு வர வேண்டும் என 40க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
ஐக்கிய இராச்சியம் தலைமையில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், உலக வர்த்தகத்திற்கும் எரிபொருள் விநியோகத்திற்கும் அத்தியாவசியமான ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட கடல் வழித்தடங்கள் தடையின்றி செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. இதனால் சில கப்பல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாற்று வழித்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் கடல் பாதுகாப்பை வலுப்படுத்தி, உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற வேண்டும் என சம்பந்தப்பட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.






3 Comments