ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க சர்வதேசப் படையை நிலைநிறுத்தும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிட்ட எச்சரிக்கையில், ஈரான் “இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தூண்டுதல் நடவடிக்கையும் (Provocative action) கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என அறிவித்துள்ளது.
ஈரான் வாதமிடுவதாவது, உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த வழித்தடத்தில், சர்வதேச நாடுகளின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதாகும்.
ஏற்கனவே இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட இந்த வரைவுத் தீர்மானம் உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.






3 Comments