Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

பாகிஸ்தானில் தற்கொலை கார் குண்டுத் தாக்குதல் !

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றை குறிவைத்து நேற்று (02) இரவு நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் பன்னு மாவட்டம் டோமெல் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. காரை ஓட்டி வந்த தற்கொலைத் தாக்குதலாளர், காவல் நிலையத்தை நேரடியாக மோதியதன் பின்னர் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்பின் தாக்கத்தால் அருகிலிருந்த பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், குறைந்தது நான்கு பொலிஸார் காயமடைந்துள்ளனர். வெடிச்சத்தம் தொலைதூரம் வரை கேட்கப்பட்டதாகவும், அதிர்வலைகள் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெடிப்பு நிகழ்ந்த உடனேயே துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றதால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

இந்த தாக்குதலில் பொலிஸ் நிலையமே முதன்மை இலக்காக இருந்தது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் அவசர மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்புக் குழுவினர் மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேரின் உடல்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...