நெகேவ் பகுதியின் நியோட் ஹோவா தொழிற்துறை வலயம் தொழிற்சாலையிலேயே பாரிய தீப்பரவல் ஏற்பட்டது. இஸ்ரேலிய தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரியுள்ளனர்.
ஈரான் இன்று (ஏப்ரல் 4) இஸ்ரேல் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைக் குறிவைத்து நடத்திய ஏவுகணை தாக்குதலின் போது, சிதறிய ஏவுகணை தொழிற்சாலையில் விழுந்ததனால் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொழிற்துறை வலயத்தில் 40க்கும் மேற்பட்ட இரசாயன மற்றும் தொழில்நுட்பத் தொழிற்சாலைகள் இருப்பதால் நச்சு வாயுக்கள் வெளியேறக்கூடும் என்ற அச்சம் இருந்தது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி எவ்வித அபாயகரமான கசிவுகளும் இல்லை என்றும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது அதிர்ச்சி மற்றும் சிறு காயங்கள் காரணமாக சிலருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.






3 Comments