Prince Andrew தொடர்பான சர்ச்சைகள், பிரிட்டிஷ் முடியாட்சி மீது புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அவரது மகள்களான Princess Beatrice மற்றும் Princess Eugenie ஆகியோரின் எதிர்கால நிலைமை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
ஆண்ட்ரூ, Jeffrey Epstein தொடர்பான சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, அண்மைக் காலங்களில் மீண்டும் கவனத்தின் மையமாகியுள்ளார். புதிய தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் பிப்ரவரி மாதத்தில் காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் வர்த்தக தூதராக இருந்த காலப்பகுதியில் தவறான நடத்தை குறித்த சந்தேகத்தின் பேரில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், அவர் எந்த குற்றச்சாட்டையும் மறுத்து வருகிறார். இதுவரை அவர் மீது அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.
2019ஆம் ஆண்டு சிறையில் உயிரிழந்த Jeffrey Epstein தொடர்பான ஊழல் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் Queen Elizabeth II மூலம் நீக்கப்பட்டன.
இந்நிலையில், அவரது மகள்கள் அரச குடும்பத்தின் செயலில் உள்ள உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும், இளவரசி பட்டங்களைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், Prince William மற்றும் Prince Harry ஆகியோருடன் நெருக்கமான உறவைப் பேணிவந்தனர்.
எனினும், சமீபத்தில் நடைபெற்ற சில அரச குடும்ப நிகழ்வுகளில் அவர்கள் காணப்படாதது, அவர்களின் எதிர்கால பங்கு குறித்து மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அரசியல் நிபுணர்கள் கருத்துப்படி, “யார்க் குடும்பத்தின் பிராண்ட் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது” என்பதால், அரச குடும்பம் அவர்களுடன் தொடர்பை குறைக்கும் முயற்சியில் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.






3 Comments