Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஈரான் போரில் நீண்ட தூர ஏவுகணைகளை பெருமளவில் பயன்படுத்தும் அமெரிக்கா !

அமெரிக்கா, ஈரான் மீது மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளில் நீண்ட தூரத் தாக்குதல் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைகளுக்காக பசிபிக் பிராந்தியத்தில் இருந்த கையிருப்புகளில் இருந்து ஏவுகணைகள் மாற்றப்பட்டு, மத்திய கட்டளைத் தளங்களுக்கும் இங்கிலாந்தில் உள்ள விமானத் தளங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போரின் முதல் நான்கு வாரங்களிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீண்ட தூர ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அமெரிக்காவின் இத்தகைய ஆயுதக் கையிருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

இந்த ஏவுகணைகள் 600 மைல்களுக்கு மேல் தூரத்தை கடந்து, எதிரியின் வான் பாதுகாப்பைத் தவிர்த்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. குறுகிய தூர ஏவுகணைகளுடன் சேர்த்து, அமெரிக்காவின் பெரும்பாலான கையிருப்பும் இந்த போரில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னர், ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு ஆயுதங்களின் விநியோகம் சவாலாக மாறியுள்ளது. பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மாற்றுவதற்கு பல ஆண்டுகள் உற்பத்தி தேவைப்படும் என மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி அளவை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.

அதேவேளை, ஈரான் தனது பதிலடி நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பிராந்திய பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்காவின் நீண்டகால இராணுவத் திட்டங்கள் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...