Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஆப்கானிஸ்தானில்பாரிய இயற்கை அனர்த்தம் கனமழை மற்றும் மண்சரிவில் சிக்கி 77 பேர் பலி !

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் இல் கடந்த 10 நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் இன் பல மாகாணங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடுமையான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 48 மணித்தியாலங்களில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் நிகழ்ந்த நிலச்சரிவுகளே இந்த உயிரிழப்புகளுக்கான பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

எதிர்வரும் நாட்களிலும் நாட்டின் பல பகுதிகளில் மேலும் மழைவீழ்ச்சி ஏற்படும் என ஆப்கானிஸ்தான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக, ஆற்றங்கரையோரங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்தால் பல வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தான் இல் வசந்த காலங்களில் பனி உருகுதல் மற்றும் கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும்.

குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...