ஈரான் அதிகாரிகள், ஈஸ்பஹான் (Isfahan) மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக வானூர்தியை தமது படைகள் தாக்கி வீழ்த்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஈரானின் ‘ஃபராஜ் ரேஞ்சர்ஸ்’ (Faraj Rangers) கமாண்டோ பிரிவு இந்த விமானத்தை சுட்டு அழித்ததாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் (Fars News Agency) தெரிவித்துள்ளது. ஈரான், இதே விமானம் மற்ற அமெரிக்க போர் விமானங்களுக்கு வான்பரப்பில் எரிபொருள் நிரப்பும் (refuelling) பணியில் இருந்ததை குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான், “புனித மண்ணை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என கூறியுள்ளது. இது F-15E போர் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் நிகழ்ந்தது; அதில் ஒரு விமானி மீட்கப்பட்டிருந்தார், மற்றொரு வீரரைத் தேடும் பணியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் இந்த வானூர்தி சம்பவங்கள் முழுமையான போருக்கான அறிகுறியாகும் என்று சர்வதேச சமூகம் கவலையுடன் கவனித்து வருகிறது.






3 Comments