உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது, போர் சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்ட பின்னரே சாத்தியமாகும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி அலுவலகத்தின் தொடர்பாடல் பிரதிப் பணிப்பாளர் செய்யிட் மெஹ்தி தபதபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் சிவில் மற்றும் உட்கட்டமைப்பு சேதங்களுக்கு சர்வதேச அளவில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து கட்டணங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ் இந்த நட்டஈடு செலுத்தப்பட்ட பின்னரே நீரிணை திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்த தபதபாயி, அந்த கருத்துக்கள் “விரக்தி மற்றும் ஆத்திரத்தின் வெளிப்பாடு” என விமர்சித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் நட்டஈடு கோரிக்கை ஆகியவை சர்வதேச மட்டத்தில் பெரும் கவனத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.






3 Comments