உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை, காசா பகுதியில் வாழும் சிறிய கிறிஸ்தவ சமூகத்திற்கு இந்த ஆண்டும் துயரமான நாளாகவே மாறியுள்ளது.
இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தாக்குதல்களால், காசாவில் வாழும் மக்கள் இடம்பெயர்வு மற்றும் கடுமையான பொருட்கள் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் இந்த முக்கிய நாளை, அங்குள்ள கிறிஸ்தவர்கள் கடினமான சூழ்நிலைகளில் அனுசரித்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை, பாதுகாப்பு அச்சம் மற்றும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றின் நடுவில், காசாவில் இந்த ஆண்டின் ஈஸ்டர் அமைதியற்ற சூழலில் கடந்து செல்கிறது.






3 Comments