டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடனடியாக ஒப்பந்தம் செய்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்காவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமைக்குள் தீர்வு காணப்படாவிட்டால் “கடுமையான தாக்குதல்” நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ஈரானின் உள்ளகப் பகுதிகளில் நடைபெற்ற ஆபத்தான நடவடிக்கையின் மூலம் அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவரை மீட்ட அமெரிக்க சிறப்பு படையினரையும் அவர் பாராட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த ஐந்து வாரங்களாக, ஈரானின் அணு ஆயுதத் திட்டம், ஏவுகணை களஞ்சியம் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் ஆதரவுகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்த முன்னேற்றங்கள் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.






3 Comments