பாகிஸ்தான் முன்வைத்த இரு கட்டப் பேச்சுவார்த்தை திட்டத்தின் மூலம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை குறைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக உடனடி போர்நிறுத்தம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக, முழுமையான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காமல் இருக்க ஒப்புக்கொள்வதுடன், அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகளை நீக்கி, வெளிநாட்டு சொத்துக்களை விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தை செயல்முறையில் பாகிஸ்தான் முக்கிய தொடர்பு நாடாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது ஆனால், இந்த திட்டத்தை இரு நாடுகளும் முழுமையாக ஏற்றுக்கொண்டதா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலைமையில், ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பும், உலகளாவிய எண்ணெய் விநியோகமும் எதிர்காலத்தில் எந்தவித மாற்றங்களை எதிர்நோக்குகின்றன என்பது குறித்து சர்வதேச கவனம் திரும்பியுள்ளது.






3 Comments