சியோல் – தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு தெரிவித்தது, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மகள் கிம் ஜூ ஏ (வயது 13) அவருடைய அடுத்த அரசியல் வாரிசாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
சமீபத்தில் கிம் ஜூ ஏ ராணுவப் பயிற்சியில் ராணுவடாங்கிகளை ஓட்டியதும், துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டதும் தென் கொரிய உளவு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வடகொரிய அரசு ஊடகங்கள் அவரை ‘மதிப்பிற்குரிய மகள்’ என்றும், நாட்டின் உயரிய தலைவர்களுக்கு வழங்கப்படும் ‘வழிகாட்டும் மாபெரும் நபர்’ பட்டத்தை அளித்து கவுரவம் செய்துவருவதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
அவரை மக்கள் முன் அறிமுகப்படுத்துவதற்கும், பெண்ணை வாரிசாக ஏற்றுக்கொள்ளும் வழக்கில் சிக்கல் ஏற்படாத வகையில், இவ்வாறு முன்னதாகவே திட்டமிடப்பட்டிருப்பதாகத் தென் கொரிய உளவு அமைப்பு கூறுகிறது.






3 Comments