ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி கொல்லப்பட்டதைக் தொடர்ந்து, மூன்றாவது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
கடிதத்தில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் காரணமெனக் கண்டனம் தெரிவித்தது. அதே நேரத்தில், ஈஸ்ரேல் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.
கமேனி கூறியதாவது:
தளபதிகளின் மரணம் எமது படைகளின் சித்தாந்தத்தில் எந்தவொரு குலைவையும் ஏற்படுத்தாது, ஏனெனில் படைகள் மிகப்பெரியது."
பெப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் தொடங்கியதிலிருந்து, ஈரானின் பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் ஒரு மாதமாக, கமேனி பொது இடங்களிலும் அரச தொலைக்காட்சியிலும் தோன்றவில்லை, தற்போது அவரின் பெயரில் கடிதங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன.
இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கமேனி அநேகமாக இறந்திருக்கலாம் அல்லது மோசமான நிலையில் இருக்கலாம், ஏனெனில் அவர் பற்றி யாரும் கேள்விப்படவில்லை," என கூறியுள்ளார்.
ஈரான் பதிலில், ஜெனிவாவிற்கான ஐநா தூதர்: "பாதுகாப்பு காரணங்களுக்காகவே கமேனி பொதுவெளியில் தோன்றவில்லை," என தெரிவித்துள்ளார். மேலும், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி: "அவர் நல்ல ஆரோக்கியத்தில் இருப்பார் மற்றும் விவகாரங்களை முழுமையாக கையாண்டு வருகிறார்," என வலியுறுத்தியுள்ளார்.
Â






3 Comments