பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல், ஈரான் உடனான 14 நாள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளது. இந்த ஒப்பந்தம் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா முன்னெடுத்த முயற்சியின் ஒரு பகுதியாகும். மேலும், பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை 14 நாட்களுக்கு நிறுத்தியுள்ளது. இதற்குப் பதிலாக, உலக எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பாக திறந்துவைக்க ஈரான் இணங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த போர்நிறுத்தம் லெபனான்-க்கு பொருந்தாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார். லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் வழக்கம்போல தொடரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களை முன்னிட்டு, லெபனான் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் எந்த மாற்றமும் இன்றி முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments