ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால போர்நிறுத்தத்தை வரவேற்றுள்ளார்.
அவரது ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில், இந்த போர்நிறுத்தம் பிராந்தியத்தில் நிரந்தர மற்றும் விரிவான அமைதிக்கான வழியை உருவாக்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களின் கீழ் தங்களது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், போர்நிறுத்த நிபந்தனைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்கவும், மனிதாபிமான பாதிப்புகளை குறைக்கவும், பகைமை நிலையை முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






3 Comments