ஜனநாயகத்திற்கான அரபு உலகம் (DAWN) என்ற மனித உரிமைகள் அமைப்பு, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட தன்னிச்சையான இராணுவ நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அமைப்பின் வாதாட்ட இயக்குநர் ரேத் ஜரார், அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன் நாடாளுமன்ற அனுமதி பெறப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகள் அதிகார வரம்புகளை மீறியவையாக இருக்கக்கூடும் என்பதால், அமெரிக்க காங்கிரஸ் உடனடியாக தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த இராணுவ நடவடிக்கைகள் எவ்வாறு தொடங்கப்பட்டன, யார் அனுமதி வழங்கினர், யார் லாபம் அடைந்தனர், மற்றும் உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும் போன்ற முக்கிய கேள்விகளுக்கு பதில் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய போர்நிறுத்தம் கடந்த தவறுகளை மறைக்கும் ஒன்றாக இருக்கக்கூடாது என்றும், மாறாக பொறுப்புக்கூறலுக்கான தொடக்கமாக அமைய வேண்டும் என்றும் ரேத் ஜரார் வலியுறுத்தியுள்ளார் இந்த விவகாரம் அமெரிக்கா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் கடும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.






3 Comments