ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கும், பலவீனமடைந்துள்ள எதிரியை முழுமையாக அழிப்பதற்கும் தேவையான அனைத்து அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் இராணுவத்தினர் அந்தப் பிராந்தியத்திலேயே தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உண்மையான உடன்படிக்கையின் நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை இந்த இராணுவப் பிரசன்னம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எட்டப்பட்ட உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் அந்தப் பிராந்தியத்திலிருந்து வெளியேறாது என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ட்ரம்பின் இந்த நேரடி எச்சரிக்கை மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.






3 Comments