குவைத்தில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை தளங்களில் ஒன்றை விரோத ட்ரோன்கள் குறிவைத்து தாக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலால் கணிசமான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் குவைத் அரசாங்கம் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்துள்ளது.
மேலும், விரோத ட்ரோன்களை எதிர்கொள்ள குவைத் வான் பாதுகாப்புப் படைகள் செயல்பட்டு வருவதாகவும், முக்கியமான இராணுவ வசதிகளே குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் குவைத் இராணுவம் தனிப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கவனம் அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






3 Comments