மும்பை சர்வதேச வானூர்தி நிலையத்தின் முதலாவது பிரிவில் நேற்று (09) மாலை சுமார் 6:10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த தீ விபத்து, தரைத்தளத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார கட்டமைப்பு பகுதிகளில் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வளாகம் முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்த நிலையில், பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், காவல்துறை மற்றும் பணியாளர்கள் இணைந்து சில நிமிடங்களிலேயே தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த சம்பவத்தால் வானூர்தி நிலைய செயல்பாடுகளுக்கும், விமானப் போக்குவரத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






3 Comments